![]() |
உங்கள் வீட்டிற்கு Wi-Fi திசைவி (Router) வாங்கி இருந்தால், அதின் விபரக்குறிப்பு தாளில் நீங்கள் IEEE 802.11b, 802.11a, 802.11g, 802.11n, 802.11ac போன்ற குறியீடுகளை கவனித்திருக்கலாம். இவை தான் Wi-Fi தரநிலைகளின் தொழில்நுட்ப பெயர்.
இந்த குழப்பமான புரிந்து கொள்ள முடியாத ஒரு தொழில்நுட்ப பெயரை நீங்கள் எப்படி ஒரு தொழில்நுட்பம் அறியாத மனிதர்கள் புரிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?
இந்த குழப்பமான குறியீட்டு பெயர் குழப்பத்தை சரி செய்ய, Wi-Fi Alliance, இந்த Wi-Fi பெயர்களை எளிதான பதிப்பு எண்களில் மறுபெயரிட முயற்சித்திருக்கிறது. எனவே, வரவிருக்கும் புதிய Wi-Fi தரநிலையான IEEE 802.11ax இன் தத்தெடுக்கப்பட்ட பெயர் Wi-Fi 6. அதுமட்டுமின்றி பழைய தரநிலைகலான 802.11ac க்கு Wi-Fi 5 என்ற பெயரையும் மற்றும், 802.11n ற்கு Wi-Fi 4 என்ற பெயரையும் மாற்றியுள்ளனர். ஆனால் 802.11n ற்கும் முந்தைய பழைய நெட்வொர்க் தரநிலைகளான 802.11b, 802.11a மற்றும் 802.11g போன்ற தரநிலைகள் அதிகாரப்பூர்வமாக பதிப்பு எண்களுக்கு மறுபெயரிடப்படவில்லை, ஏனெனில் அவை பரவலாக பயன்பாட்டில் இல்லை என்ற காரணத்தால்.
- Wi-Fi 6 - 802.11ax (புதிய பதிப்பு 2019 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது).
- Wi-fi 5 - 802.11ac (2014. திறம்பட தற்போதைய தரநிலை).
- Wi-Fi 4 - 802.11n (2009).
- Wi-Fi 3 (அதிகாரப்பூர்வமற்றது) - 802.11 ஜி (2003).
- Wi-Fi 2 (அதிகாரப்பூர்வமற்றது) - 802.11a (1999).
- Wi-Fi 1 (அதிகாரப்பூர்வமற்றது) - 802.11b (1999).
![]() |
Image : Wifi Alliance |
Wi-Fi 6 (802.11ax)ல் புதிதாக என்ன சிறப்பம்சங்கள் உள்ளது?
விரைவானது: புதிய தரநிலை Wi-Fi 6 2.4Ghz மற்றும் 5Ghz அதிர்வெண் ஆகிய இரண்டையும் சமாளிக்க முடியும், ஆனால் அதன் முன்னோடியான 802.11ac 5Ghz அதிர்வெண்ணில் மட்டுமே செயல்பட முடியும். இதன் விளைவாக Wi-Fi 6 ஆனது 2.4Ghz மற்றும் 5Ghz spectrum band-ஐ இணைப்பதன் மூலம் வேகத்தை அதிகரிக்கும்.நடைமுறையில் இந்த Wi-Fi 6, 10Gbps வரையிலான வேகத்தை கொடுக்க முடியும். Wi-Fi 6 இன் அதிகபட்ச வேகமானது Wi-Fi 5 உடன் ஒப்பிடுகையில் 40-50% அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இது 4K மற்றும் 8K வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்ய ஒரு பெரிய துணையாக இருக்கும்.
பேட்டரி சேமிப்பு: இந்த Wi-Fi 6ல் Target Wake Time என்ற ஒரு அம்சம் உள்ளது. இது சாதனங்கள் எப்பொழுது விழித்திருக்க வேண்டும், எப்பொழுது துங்கு வேண்டும் என கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். இதனால் பேட்டரிகளில் மின் நுகர்வு அதிகம் ஆகாதபடி குறைக்கப்படும்.
கூட்டம் நிறைந்த இடத்திலும் தடையில்லா இணைப்பு: Wi-Fi 6 ஆனது Orthogonal Frequency Division Multiple Access (OFDMA) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது, இது Access Point-ஐ நெரிசல் இல்லாமல் பல சாதனங்களுக்கு ஒரே நேரத்தில் பகிர உதவுகின்றது.
Wi-Fi 6 மேலும் MU-MIMO (Multi User - Multi Input, Multi Output) என்ற தொழில்நுட்பமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய பதிப்பு Wi-Fi 5 டவுன்லின்கி இணைப்பில் மட்டுமே இயங்குகிறது, அதாவது Wi-Fi 5-இன் Access Point பல சாதனங்களுக்கு பகிரப்பட்டாலும், சாதனங்களால் அதே நேரத்தில் பதிலளிக்க முடியாது. ஆனால் MU-MIMO அப்லிங்க் அனுகூலத்தின் மூலம், Wi-Fi 6 டவுன்லிங் மற்றும் அப்லிங்க் இணைப்பு ஆகிய இரண்டிலும் வேலை செய்ய முடியும், இங்கு Access Point சாதனங்களுக்கு பகிரப்படும், அதே நேரத்தில் சாதனங்களும் Access Point-க்கு பதிலளிக்கவும் முடியும்.
No comments:
Post a Comment