Feb 5, 2019

கணினியில் BIOS Password அல்லது UEFI Password அமைப்பது எப்படி

Bios uefi password

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டமில் உள் நுழை கடவுச்சொல் (Login Password) அம்சம் உள்ளது என்பது நமக்கு தெரிந்தது தான், இது ஒரு நல்ல பாதுகாப்பு அம்சம் தான், ஆனால் இந்த உள் நுழை கடவுச்சொலானது மற்றவர்கள் உங்கள் கணினியில் நுழயாத படி முற்றிலுமாக பாதுகாக்கும் என்று சொல்ல முடியாது. உங்கள் கணினியை அணுகுவதற்கு ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர் உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து Bootable USB அல்லது CD/DVD  மூலமாக உங்கள் தற்போதைய ஆப்பரேட்டிங் சிஸ்டமை அழித்து ஒரு புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமை எளிதாகப் இன்ஸ்டால் செய்ய முடியும்.

ஆனால், இதற்காக கவலைப்பட வேண்டாம், BIOS அல்லது UEFI கடவுச்சொல்லை செட் செய்வதின் மூலம் உங்களது கணினியின் பாதுகாப்பை கூட்டலாம்.

BIOS / UEFI (Password) கடவுச்சொல் என்றால் என்ன?

கணினியின் லாகின் பாஸ்வேர்டு அல்லது அக்கௌன்ட் பாஸ்வேர்டு சேட் செய்வதின் முலம் உங்கள் கணினிக்கு ஓரளவு பாதுகாப்பு கிடைக்கும், அதாவது ஒரு நபர் உங்களது கணினியின் கீபோர்டு மற்றும் மவுஸை மட்டுமே அனுக முடியுமானால், லாகின் பாஸ்வேர்டு போதுமானது. ஆனால் நான் முன்பு கூறியது போல், உங்கள் கணினியை ஒருவர் அனுகி மறுதொடக்கம் செய்து Bootable USB drive மூலம் உங்கள் கணினியின் USB Portஐ அனுகவோ அல்லது CD/DVD முலம்  அணுகும் போது, ​​நீங்கள் அமைத்த உள்நுழைவு கடவுச்சொல் (login password) உங்கள் கணினியை இனியும் பாதுகாக்க முடியாது.

ஆனால், BIOS அல்லது UEFI கடவுச்சொல் அமைப்பதன் மூலம் வேறு எந்த நபரும் உங்கள் BIOS செட்டீங்கை அணுகுவதை தடுக்க முடியும். இந்த BIOS அல்லது UEFI கடவுச்சொல்லை நீங்கள் செட் செய்துவிட்டால், உங்கள் கணினியை நீங்கள் ஆன் செய்தவுடனே BIOS அல்லது UEFI கடவுச்சொல்லை என்டர் செய்ய செல்லி கேட்கும். எனவே, சரியான உள்நுழைவு கடவுச்சொல் தெரியாமல் மற்றவர்கள் உங்கள் கணினி BIOS செட்டிங்கில்  நுழைந்து Bootable USB சாதனங்கள் மூலமாகவோ  CD/DVD மூலமாகவோ மேலும் உங்கள் கணினியை சேதமாக்காதபடி தடுக்கலாம். உங்கள் கணினியில் நீங்கள் உங்களது நிதி மற்றும் வணிகம் சார்ந்த தகவல்களை வைத்திருந்தால், உங்கள் கணினிக்கு இந்த BIOS அல்லது UEFI கடவுச்சொல்லை கட்டாயம் அமைக்க வேண்டும்.

BIOS கடவுச்சொல் அமைப்பது எப்படி

Step 1: உங்களது கணினியில் BIOS செட்டிங் இருந்தால், நீங்கள் முதலில் உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து, BIOS செட்டிங்கை திறக்க வேண்டும். BIOS செட்டிங்குக்கான பட்டன் உங்களது மதர்போர்டு மாதிரி அடிப்படையில் கணினியிலிருந்து கணினிக்கு மாறுபடும், வழக்கமாக F2, Delete, F1, F10 அல்லது ESC இதில் ஏதேனும் ஒரு பட்டன் தான் BIOS செட்டிங் திறப்பதறதிற்காக பட்டனாக இருக்கும். சரியான பட்டன் எதுவேன்று அறிய உங்கள் PC யூசர் மேனுவலை பார்க்கவும்.
Bios uefi password

Step 2: BIOS செட்டிங்கை திறந்ததும் Security அல்லது Password மெனுவுக்கு செல்லவும்.
Bios uefi password

Step 3: Security அல்லது Password மெனுவில், Set Supervisor Password என்ற ஒரு தேர்வு இருக்கும். இதுதான் BIOS அமைப்பை மற்றவர்கள் அனுகாதபடி தடுக்க நாம் கொடுக்க வேண்டிய பாஸ்வேர்டு அமைப்பு. ஆதலால், உங்களது கடவுச்சொல்லை இதன் மூலமாக அமைக்கவும்.
Bios uefi password

Step 4: கடைசியாக அமைப்பை F10 பட்டன் அழுத்தி Save செய்துகொள்ளவும். இப்போது நீங்கள் BIOS பாஸ்வேர்டை வெற்றிகரமாக செட் செய்வதுவிட்டிர்கள்.
Bios uefi password

UEFI கடவுச்சொல் அமைப்பது எப்படி

உங்கள் கணினியில் UEFI செட்டிங் இருக்குமானால், இதுவும் BIOS கடவுச்சொல்லைப் போலவே கடவுச்சொல் விருப்பத்தை வழங்குகிறது.

Step 1: உங்கள் கணினி Settings-ல் Update and Security என்பதை கிளிக் செய்யவும்.
Bios uefi password

Step 2: இங்கு Recovery ஆப்சனை தேர்வு செய்யவும்.
Bios uefi password

Step 3: அதில் Restart now என்பதை நீங்கள் கிளிக் செய்தால் வேறொரு புதிய மெனு ஓபன் ஆகும்.
Bios uefi password

Step 4: இங்கு Troubleshoot-ஐ கிளிக் செய்யவும்.
Bios uefi password

Step 5: இதில் Advanced options-ஐ கிளிக் செய்யவும்.
Bios uefi password

Step 6: இங்கு UEFI Firmware settings ஆப்சனை தேர்வு செய்து UEFI பாஸ்வேர்டை நீங்கள் செட் செய்துகொள்ளலாம்.
Bios uefi password


வீடியோ  Demo!


Feb 3, 2019

Windows 10 கணினி மெதுவாக துவங்கும் பிரச்சனையை சரிசெய்வது எப்படி?

Slow boot

மைக்ரோசாப்ட் தங்கள் விண்டோஸ் 10 பயனர்களுக்கு இதுவரை மூன்று முக்கியமான அப்டேட்டை வழங்கியுள்ளது, ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த அப்டேட்ஸ்சை பெற்றும் விண்டோஸ் 10 OS, மெதுவாக துவங்‌கும் பிரச்சனைக்கான தீர்வை இன்னும் காணவில்லை, இது தற்போது வரை தொடர்கிறது, அதுவும் குறிப்பாக விண்டோஸ் 7 மற்றும் 8-லிருந்து  விண்டோஸ் 10 க்கு மாறியவர்களுக்கு இந்த பிரச்சினை அதிகமாகவே உள்ளது.

கவலை வேண்டாம், விண்டோஸ் 10 மெதுவாக துவங்கும் சிக்கலை சரிசெய்து, துவக்க வேகத்தை அதிகரிக்க உதவும் சில எளிய வழிகளை நாங்கள் உங்களுக்குக் காட்டுகிறோம்.

Fast Startup-ஐ முடக்கவும்

விண்டோஸ் 10 இல் Fast Startup என்ற ஒரு அம்சம் இயல்பாக விருப்ப தேர்வாக இருக்கும், இது உங்கள் விண்டோஸ் 10 துவக்க வேகத்தை அதிகரிக்க, சில துவக்க தகவல்களை முன்பாகவே பதிவேற்ற, அனைத்து பயனாளர்களுடைய பதிவுகள், அப்லிகேசன் மற்றும் புரோகிராம்களை உங்கள் விண்டோஸ் 10 PC முடங்கும் முன், முன்பதாகவே அவைகளை சேமித்து முட உதவியாக உள்ளது. இதன் விளைவாக, நீங்கள் அடுத்த முறை உங்கள் கணினியைத் துவக்கும் போது, ​​உங்கள் கணினி நல்ல தொடக்க வேகத்துடன் துவங்கும்.
ஆனால் துரதிருஷ்டவசமாக, பல விண்டோஸ் 10 பயனாளர்களுக்கு இந்த Fast Startup அம்சமே கணினியை மெதுவாக தொடங்க காரணமாக உள்ளது என்று பல விண்டோஸ் 10 பயனாளர்கள் கூறி உள்ளனர். ஆம் அது உண்மைதான். மைக்ரோசாப்டின் சமூகதல சரிபார்பாலரான அலேக்ஸ் ஷென் கூறியது என்னவென்றால் Fast Startup ஆனது சரியாக செயல்பட வீடியோ கார்டு டிரைவ் மற்றும் பவர் மேனேஜ்மென்ட் டிரைவை அதிகமாக பயன்படுத்துகிறது என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது பல டிரைவுகள் இந்த அம்சத்துடன் இணக்கமாக இல்லை. இதனால் கணினி துவங்கும் வேகத்தை மேலும் பாதிக்கப்படுகிறது.
எனவே, இந்த சிக்கலை சரிசெய்ய, நீங்கள் Fast Startup அம்சத்தை முடக்க வேண்டும்.
Step 1: தேடல் பெட்டி(search box)ல் Power option என்று டைப் செய்து அந்த Power optionஐ கிளிக் செய்யவும்.
Slow boot

Step 2: இப்போது Choose what the power button do என்பதை கிளிக் செய்யவும்.
Slow boot

Step 3: இங்கு Shutdown settingஐ அனுக முடியாதபடி தடை காணப்படும். அந்த தடையை நீக்க Change settings that are currently unavailable என்பதை கிளிக் செய்யவும்.
Slow boot

Step 4: இப்போது Shutdown settings கீழ் Turn on Fast start-up என்ற தேர்வில் உள்ள டிக்கை நீக்கி, Save changes கிளிக் செய்யவும்.
Slow boot

Step 5: இப்போது கணினியை மறுதொடக்கம் செய்து வேகத்தை சோதித்து பாருங்கள்.

தேவையற்ற உயர் தொடக்க புரோகிராம் மற்றும் அப்லிகேசனை முடக்கவும்.

நாம் நம் கணினியில் புதிய புரோகிராம் மற்றும் அப்லிகேசனை இன்ஸ்டால் செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்போம், இதனால் நாம் கணினியில் நிறுவிய சில புரோகிராம்கள், கணினியை துவக்கும்போது தானாகவே தொடங்க இயலும். இந்த தொடக்கத் திட்டங்கள் உங்கள் விண்டோஸ் 10 கணினியின் துவக்க நேரத்தை நீட்டிக்க வழிவகுக்கும். எனவே தேவையற்ற உயர் தொடக்க தாக்கம் உள்ள புரோகிராம்களை நிறுத்த இந்த வழிகளை பின்பற்றவும்.

Step 1: கீபோர்டில் Ctrl + Alt + del பட்டன்களை ஒன்றாக அழுத்தினாள் Task Manager ஓபன் ஆகும்.
Slow boot

Step 2: இங்கு Startup மெனுவில் உங்களது கணினியில் என்ன என்ன புரோகிராம்கள், எந்த தொடக்க வேக நிலையில் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று பார்க்கலாம்.
Slow boot

Step 3: அதில் உங்களுக்கு பரிட்சையமில்லாத ஏதேனும் புரோகிராம், அப்லிகேசன் அதி வேக தொடக்க நிலையில் இயங்கிக் கொண்டிருந்தால் அதை நிறுத்த, அதை தேர்வு செய்து கீழே Disableஐ கிளிக் செய்தால் அந்த புரோகிராம் முடக்கப்படும்.
Slow boot

உங்களது கிராபிக்ஸ் கார்டு டிரைவை புதுப்பிக்கவும்.

சில நேரங்களில் பழைய அல்லது சரியாக செயல்படாத கிராபிக்ஸ் கார்டு இயங்கிக் கொண்டிருந்தாலும் அது கணினியின் மெதுவான துவக்கத்திற்கு காரணமாக இருக்கும். எனவே, இந்த சிக்கலை சரிசெய்ய, உங்கள் கிராபிக்ஸ் டிரைவ் சாப்டுவேரை கிராபிக்ஸ் கார்ட் உற்பத்தியாளர் வலைத்தளத்திலிருந்து மீண்டும் ரீஇன்ஸ்டால் செய்ய வேண்டும்.

 Step 1: Windows + R keyஐ அழுத்தி Run commandஐ ஓபன் செய்து, பின்னர் devmgmt.msc என்று டைப் செய்து Enter ஐ அழுத்தவும்.
Slow boot

Step 2: இப்போது நீங்கள் Drive Manager விண்டோவை பார்க்கலாம், அதில் Display adapter என்ற ஆப்சனை டபுல் கிளிக் செய்தால் உங்களது கிராபிக்ஸ் கார்டு டிரைவ் பார்க்கலாம். அதை Right கிளிக் செய்து Uninstall கொடுக்கவும்.
Slow boot

Step 3: இப்போது உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து, உங்களது கிராபிக்ஸ் கார்ட் உற்பத்தியாளர் வலைத்தளத்திற்குத் சென்று, உங்கள் கிராபிக்ஸ் கார்டு மாடலை கண்டறிந்து, அதன் சமீபத்திய சாப்டுவேர் பதிப்பை இன்ஸ்டால் செய்யவும்.

விண்டோஸ் 10 OSஐ அப்டேட் செய்யவும்.

சில நேரங்களில் உங்களது விண்டோஸ் 10 அப்டேட்டில் உள்ள Bugs மற்றும் பிழைகள் உங்கள் கணினி துவங்கும் வேகத்தை குறைக்கலாம்.
இந்த சிக்கலைச் சரிசெய்ய, மைக்ரோசாஃப்டின் தற்போதைய விண்டோஸ் 10 அப்டேட்டை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

Step 1: Settings செல்லவும்.
Slow boot

Step 2: அங்கு Update and Security என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
Slow boot

Step 3: இப்போது Check for updates கிளிக் செய்து விண்டோஸ் 10 ஐ அப்டேட் செய்யவும்.
Slow boot

கணினியில் வைரஸ் உள்ளதா என்று சோதிக்கவும்.

வைரஸ், கணினியின் செயல்திறன் குறைவுக்கான வழக்கமான காரணமாகும். எனவே, நல்ல Antivirus Softwareஐ நிறுவி, உங்கள் கணினிக்கு வழக்கமான வைரஸ் சோதனை செய்ய வேண்டும்.
உங்களிடம் Antivirus இல்லை என்றால், Windows Defender மூலம் தொற்று உள்ளதா என்று ஸ்கேன் செய்யவும்.
Slow boot

வீடியோ Demo!










Jan 31, 2019

Windows 10 Auto update செயல்பாட்டை நிரந்தரமாக நிறுத்துவது எப்படி

Auto update


Operating system-கான சிறந்த பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களது பயனாளர்களுக்கு எந்தவொரு அறிவிப்பும் தராமல், auto updates-ஐ கணினிக்கு அனுப்பி தானாகவே தானாகவே புதுப்பித்துக் கொள்ளுமாறு செய்கின்றனர். மைக்ரோசாப்டின் இந்த அணுகுமுறை பல பயனர்களுக்கு வசதியாக இல்லை, ஏனென்றால் தானாக புதுப்பித்துக்கொள்ளும் போது விண்டோஸ் மெதுவாக இயங்குவதோடு அடிக்கடி கணினியை (restart) மறுதொடக்கம் செய்யுமாறு தூண்டுகிறது. கவலை வேண்டாம், நீங்கள் விண்டோஸ் 10 (Professional, Education அல்லது Enterprise) உபயோகித்தால், உங்கள் கணினியை Auto update ஆகாதபடி முடக்கலாம்.

விண்டோஸ் புதுப்பிப்பு சேவையை முடக்கும் வழி!

ஒவ்வொரு முறையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் updates-ஐ அனுப்பும் போது
விண்டோஸ் புதுப்பிப்பு சேவையானது அதை தானாகவே பதிவிறக்கி, செயல்படுத்தவும் செய்கிறது. ஆகவே இந்த விண்டோஸ் புதுப்பிப்பிக்கும் செவயை நிறுத்த கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்!

Step 1: உங்களது விசைப்பலகை (Keyboard)யில் Run command-ஐ திறந்து Windows key + R ஐ அழுத்தவும்.
Auto update


Step 2: இப்போது Run command Box-ல் Services.msc என்று டைப் செய்து OK கொடுக்கவும்.
Auto update

Step 3: இப்போது Windows update என்ற சேவயை தேடி, அதை ரைட் கிளிக் செய்து Properties-ஐ கிளிக் செய்யவும்.

Auto update

Step 4: இங்கு Startup type-ன் கீழ் Disabled என்ற ஆப்சனை தேர்வு செய்து, கீழே Apply மற்றும் OK கொடுத்தால் மாற்றப்பட்ட செட்டிங் உறுதியாகிவிடும்.
Auto update

இப்போது நீங்கள் விண்டோஸ் புதுப்பிப்பு சேவையை நிரந்தரமாக முடக்கியுள்ளீர்கள். இந்த வழிமுறை உங்களுக்கு வேலை செய்யும் என்று நம்புகிறேன். நன்றி!

Jan 29, 2019

Wi-Fi 6 : வரவிருக்கும் புதிய WiFi-யின் சிறப்பம்சங்கள்!


Wi-Fi 6, தொழில்நுட்ப ரீதியாக IEEE 802.11ax என அறியப்படுகிற புதிய வயர்லெஸ் நெட்வொர்க் தரநிலை இந்த ஆண்டு சாதனங்களில் தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே, Wi-Fi தரநிலைகள் குழப்பமான குறியீடு பெயரில்தான் அடையாளம் காணப்பட்டன, அவை IEEE (The Institute of Electrical and Electronics Engineer) என்ற நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டது.

உங்கள் வீட்டிற்கு Wi-Fi திசைவி (Router) வாங்கி இருந்தால், அதின் விபரக்குறிப்பு தாளில் நீங்கள் IEEE 802.11b, 802.11a, 802.11g, 802.11n, 802.11ac போன்ற குறியீடுகளை கவனித்திருக்கலாம். இவை தான் Wi-Fi தரநிலைகளின் தொழில்நுட்ப பெயர். 
இந்த குழப்பமான புரிந்து கொள்ள முடியாத ஒரு தொழில்நுட்ப பெயரை நீங்கள் எப்படி ஒரு தொழில்நுட்பம் அறியாத மனிதர்கள் புரிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?

இந்த குழப்பமான குறியீட்டு பெயர் குழப்பத்தை சரி செய்ய, Wi-Fi Alliance, இந்த Wi-Fi பெயர்களை எளிதான பதிப்பு எண்களில் மறுபெயரிட முயற்சித்திருக்கிறது. எனவே, வரவிருக்கும் புதிய Wi-Fi தரநிலையான IEEE 802.11ax இன் தத்தெடுக்கப்பட்ட பெயர் Wi-Fi 6. அதுமட்டுமின்றி பழைய தரநிலைகலான 802.11ac க்கு Wi-Fi 5 என்ற பெயரையும் மற்றும், 802.11n ற்கு Wi-Fi 4 என்ற பெயரையும் மாற்றியுள்ளனர். ஆனால் 802.11n ற்கும் முந்தைய பழைய நெட்வொர்க் தரநிலைகளான 802.11b, 802.11a மற்றும் 802.11g போன்ற தரநிலைகள் அதிகாரப்பூர்வமாக பதிப்பு எண்களுக்கு மறுபெயரிடப்படவில்லை, ஏனெனில் அவை பரவலாக பயன்பாட்டில் இல்லை என்ற காரணத்தால்.
  • Wi-Fi 6 - 802.11ax (புதிய பதிப்பு 2019 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது).
  • Wi-fi 5 - 802.11ac (2014. திறம்பட தற்போதைய தரநிலை).
  • Wi-Fi 4 - 802.11n (2009).
  • Wi-Fi 3 (அதிகாரப்பூர்வமற்றது) - 802.11 ஜி (2003).
  • Wi-Fi 2 (அதிகாரப்பூர்வமற்றது) - 802.11a (1999).
  • Wi-Fi 1 (அதிகாரப்பூர்வமற்றது) - 802.11b (1999).


Image : Wifi Alliance

Wi-Fi 6 (802.11ax)ல் புதிதாக என்ன சிறப்பம்சங்கள் உள்ளது?

விரைவானது: புதிய தரநிலை Wi-Fi 6 2.4Ghz மற்றும் 5Ghz அதிர்வெண் ஆகிய இரண்டையும் சமாளிக்க முடியும், ஆனால் அதன் முன்னோடியான 802.11ac 5Ghz அதிர்வெண்ணில் மட்டுமே செயல்பட முடியும். இதன் விளைவாக Wi-Fi 6 ஆனது 2.4Ghz மற்றும் 5Ghz spectrum band-ஐ இணைப்பதன் மூலம் வேகத்தை அதிகரிக்கும்.
நடைமுறையில் இந்த Wi-Fi 6, 10Gbps வரையிலான வேகத்தை கொடுக்க முடியும். Wi-Fi 6 இன் அதிகபட்ச வேகமானது Wi-Fi 5 உடன் ஒப்பிடுகையில் 40-50% அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இது 4K மற்றும் 8K வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்ய ஒரு பெரிய துணையாக இருக்கும்.

பேட்டரி சேமிப்பு: இந்த Wi-Fi 6ல் Target Wake Time என்ற ஒரு அம்சம் உள்ளது. இது சாதனங்கள் எப்பொழுது விழித்திருக்க வேண்டும்,  எப்பொழுது துங்கு வேண்டும் என கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். இதனால் பேட்டரிகளில் மின் நுகர்வு அதிகம் ஆகாதபடி  குறைக்கப்படும்.

கூட்டம் நிறைந்த இடத்திலும் தடையில்லா இணைப்பு: Wi-Fi 6 ஆனது Orthogonal Frequency Division Multiple Access (OFDMA) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது, இது Access Point-ஐ நெரிசல் இல்லாமல் பல சாதனங்களுக்கு ஒரே நேரத்தில் பகிர உதவுகின்றது.
Wi-Fi 6 மேலும் MU-MIMO (Multi User - Multi Input, Multi Output) என்ற தொழில்நுட்பமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய பதிப்பு Wi-Fi 5 டவுன்லின்கி இணைப்பில் மட்டுமே இயங்குகிறது, அதாவது Wi-Fi 5-இன் Access Point பல சாதனங்களுக்கு பகிரப்பட்டாலும், சாதனங்களால் அதே நேரத்தில் பதிலளிக்க முடியாது. ஆனால் MU-MIMO அப்லிங்க் அனுகூலத்தின் மூலம், Wi-Fi 6 டவுன்லிங் மற்றும் அப்லிங்க் இணைப்பு ஆகிய இரண்டிலும் வேலை செய்ய முடியும், இங்கு Access Point சாதனங்களுக்கு பகிரப்படும், அதே நேரத்தில் சாதனங்களும் Access Point-க்கு பதிலளிக்கவும் முடியும்.

Wi-Fi 6 சாதனங்கள் எப்பொழுது விற்பனைக்கு வரும்?

Wi-Fi 6 தரமானது 2019 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ASUS, Netgear போன்ற பிராண்டுகள் ஏற்கனவே 802.11ax ரவுட்டர்களை அறிவித்துள்ளதால். எப்போதும் போல், திசைவி மற்றும் Wi-Fi இரைப்பு உள்ள சாதனங்கள் என இவ்விரண்டிலும் Wi-Fi 6 வசதி இருந்தால்தான் சிறந்த செயல்திறன் காண முடியும். எனவே, Router மற்றும் இரைப்பு உள்ள சாதனம் என இரண்டும் Wi-Fi 6 என்ற அதே தரநிலையில் இயங்கும் நிலைக்கு வரும் வரை காத்திருந்து பார்க்கலாம்.

Wi-Fi 6 தரநிலை உள்ள சில Routers!